வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பாவப்பட்ட மக்களே எங்கள் கண்ணுக்கு தெரிகின்றனர்

அன்பர்களே !பொய் சத்தியம் பண்ணினேன் என்றும் அதற்கு சாட்சிகள் உண்மையான தவ்ஹித்வாதிகள் என்று சைபுல்லாஹ் [sword of Allaah] என்ற பெயரிலும் அரசன் என்ற பெயரிலும் வந்தவர்கள் நிருபிக்க இயலாமல் ஓடிவிட்டதை பார்த்திருப்பீர்கள்.இத்தனை நாட்கள் பதில்சொல்லாமல் மறைந்தவர்கள் இதனை கண்டவுடன் மீண்டும் வருவார்கள் .ஏதேதோ உளறிவிட்டு நிருபிக்க அழைத்தால் மீண்டும் ஓடிப்போவதுமே வழக்கமாக வைத்துள்ளனர். என்னை பொய் சத்தியம் பண்ணினேன் என்று சொன்னவர்கள் அவர்களின் பொய்யில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.அதோடு நின்ற பாடில்லை .ரமலான் மாதத்தில் பொய் வழக்கும் தொடுத்துள்ளனர். இவர்களது பொய்களை சுட்டி காட்டினால் ஒப்பந்தம் முடிந்து விட்டது இடத்தை ஒப்படையுங்கள் என்கின்றனர்.ஒப்பந்தம் முடிந்தால் மீண்டும் ஒரு ஒப்பந்தமோ ஒப்பந்தம் இல்லாமலோ எங்களது தொழுகைகளுக்கு இடம் அளிப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன குடி முழுகி போகும் சமாச்சாரம் ?இந்த இடத்தில் பெண்கள் மதரசா கட்டப் போகிறோம் என்று ஒரு பொய் சாக்கு வேறு. மேலும் அவர்கள் ஒற்றுமையாக ஒரே ஜமாத்துக்காக பாடு படுவதாகவும் ஒரு காரணம் .ஒற்றுமை என்றால் அல்லாஹ் சொன்ன வழியில் நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த வழியிலே இருக்க வேண்டும்.அதை மறுத்து நீங்கள் சொல்லும் ஒற்றுமை ஒருநாளும் வராது.பக்கத்து கொங்கராய குறிச்சியில் ஒரே ஜமாத்தாகத்தானே தொழுதார்கள்.அங்கெ ஏன் கோர்ட் வரை பள்ளிவாசல் வழக்கு சென்றது?பஞ்சாயத்து தலைவர் பதவி ஏன் கை நழுவி போனது? இன்னும் சுன்னத் ஜமாதினர்க் குள்ளேயே எத்தனை சண்டைகள் நடந்து வருகிறது?எத்தனை கேஸ்கள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன? ஒரே ஜமாத்திற்குள் ஏன் இத்தனை சண்டைகள்? அப்துல் பாரி அவர்கள் தலைவராக இருந்த சமயத்திலும் எங்களுக்கு இணக்கமாக் இருந்ததில்லை.இருப்ப்பினும் நியாயமாக,நடுநிலையாக செயல்பட்டார் என்பதே உண்மை .உங்களது அடவடிகளாலும் பொய்களின் தொந்தரவு களாலும்  இன்று எங்கள் ஆதரவாளராக உள்ளார்.
இந்த இடம் இறையருளால் எங்கள் கையை விட்டு போகாது .அப்படியே கோர்ட்டில் பணபலத்தால் நீங்கள் வென்றாலும் தனி இடம் வாங்கி தனி ஜமாத்தாக உருவாகுமே தவிர கப்ர் வணங்கிகளுடனும் பிதத்வாதிகளுடனும் எங்களுக்கு ஓட்டோ உறவோ இல்லாமல் போகிவிடும் நிலையே ஏற்படும்.என்னைவிட இளைஞர்கள் இந்த கருத்தில் உறுதியாக உள்ளனர் என்பதை எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்..அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுபடுபவர்களாக இருந்தால்  நீங்கள் இப்படி கோர்ட்டுக்குக் போலீசுக்கும் அலையமாட்டீர்கள்.நமது ஊரில் உள்ள நடுநிலையாளர்களை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருப்பீர்கள். உங்களைப் போல்  நாங்கள் போலீசுக்கும் கோர்ட்டுக்கும் செலவழிக்க விரும்ப வில்லை .மேலும் வீம்புக்காக கந்துரியும் கச்சேரியும் வான வேடிக்கைகளும் நடத்தி காசை விரயமாக்காமல் மக்களுக்கு வேண்டிய கல்வி உதவி மருத்துவ உதவி போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதிலே எங்கள் கவனம் உள்ளது. கோர்ட்டிற்கு சென்று வக்கீலுக்கு பணம் அள்ளி கொடுப்பதை விட பாவப்பட்ட மக்களே எங்கள் கண்ணுக்கு தெரிகின்றனர்.அல்லாஹ் என்ன நாடினானோ அதுவே நடக்கட்டும் 

8 கருத்துகள்:

  1. /////அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுபடுபவர்களாக இருந்தால் நீங்கள் இப்படி கோர்ட்டுக்குக் போலீசுக்கும் அலையமாட்டீர்கள்.நமது ஊரில் உள்ள நடுநிலையாளர்களை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருப்பீர்கள்.////// என்று எழுதயுளீர்கள்.

    நீங்கள் நடுநிலையாளர்கள் என்று யாரை கூறுகிறீர்கள்.முதலில் அவர்கள் பெயரை சொல்லுங்கள். அவர்கள் மூலம் நீங்களே ஜமாத்துடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இப்போ பிரச்சனையே நீங்கள் சொல்லும் நடுநிலையாளர்கள், நடுநிலையாளர்களா?
    அவர்கள் மூலம் தீர்வு கண்டால் அந்த ஒப்பந்தத்தை நீங்கள் (மீண்டும்) மீற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?
    இதை விளக்கி நீங்களே அமர்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நடுநிலையார்கள் யார்? நீங்கள் சொன்ன உண்மையான ,நடுநிலையான தவ்ஹித்வாதிகளையே நடுநிலை யாளர்களாக வைத்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  3. ibrahim சொன்னது…

    நடுநிலையார்கள் யார்? நீங்கள் சொன்ன உண்மையான ,நடுநிலையான தவ்ஹித்வாதிகளையே நடுநிலை யாளர்களாக வைத்துக் கொள்வோம்.6 ஆகஸ்ட், 2011 9:16 pm....
    அரசன் கேட்பது ;;;;
    ! அப்போ நமது ஊரில் நடுநிலையான தௌஹீத்வாதிகள் உள்ளனர் என்று ஒப்பு கொள்கிறீர்களா?
    !! நடுநிலையான தொவ்ஹீத்வாதிகளுக்கு நான் சொன்ன விளக்கம் உண்மை என்று ஒப்பு கொள்கிறீர்களா?
    !!! ஒப்பந்தம் மீறமாட்டோம் என்ற உறுதிமொழியை காணோம்?

    பதிலளிநீக்கு
  4. ப.க.ப-விற்கு கேள்விகள்;
    இவர்களது பொய்களை சுட்டி காட்டினால் ஒப்பந்தம் முடிந்து விட்டது இடத்தை ஒப்படையுங்கள் என்கின்றனர்.ஒப்பந்தம் முடிந்தால் மீண்டும் ஒரு ஒப்பந்தமோ ஒப்பந்தம் இல்லாமலோ எங்களது தொழுகைகளுக்கு இடம் அளிப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன குடி முழுகி போகும் சமாச்சாரம் (வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011) என்று எழுதிஉள்ளார்.

    அரசனின் கேள்விகள்;;
    1- ஒப்பந்தம் முடிந்துவிட்டால், வக்ப் சொத்தை பள்ளிக்கு ஒப்படைத்து விடுவதில் உங்களுக்கு தான் அப்படி என்ன குடி முழுகி போகும் ?(ஒரு முஸ்லிமிற்கு அழகு ஒப்பந்தத்தை மீற கூடாது)
    2- நீங்கள் இதுவரை ஒப்பந்தம் நீட்டிப்பு பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டு இருக்கிறீர்களா?
    3- நீங்கள் அல்லவா அன்று காவல் நிலையத்தில் ஒப்பந்தம் நீடித்து கேட்கிறீர்களா என்று ஆய்வாளர் உங்களிடம் கேட்டதற்கு '' தந்தாலும் சரி, தரவில்லைஎன்றாலும் சரி, சிவிலில் பார்த்து கொள்ளுங்கள்'' என்று (முறையற்ற முறையில்) பதில் அளித்தீர்கள். இது முறையான பதிலா?
    4- இந்த பதிலை கேட்ட பிறகும் எந்த நடுநிலையாளரை வைத்து உங்களிடம் பேச முடியும்? சென்ற ரமளானில் (நமது ஊரில் அல்ல, தமிழ்நாட்டில்) நடந்த சம்பவத்தை யாரும் மறக்க வில்லை இந்நிலையில் யார் பேச முன் வருவார்கள்?

    பள்ளியில் உங்களுக்கு (எல்லோருக்கும், எல்லா பள்ளிகளிலும்) உள்ள உரிமை பள்ளியில் தொழுகை, அடக்கம் ,திருமணம் மற்றும் மார்க்க விசயத்தில் அனைத்திலும் பங்கு தானே தவிர பள்ளி சொத்தை தனியாக பிரித்து தாருங்கள் என்று கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பிரித்து கொடுக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொன்ன நடுநிலையான,உண்மையான தவ்ஹித்வாதிகள்" என்றே குறிப்பிட்டுள்ளேன்.
    ////நீங்கள் நடுநிலையாளர்கள் என்று யாரை கூறுகிறீர்கள்.முதலில் அவர்கள் பெயரை சொல்லுங்கள். அவர்கள் மூலம் நீங்களே ஜமாத்துடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள். இப்போ பிரச்சனையே நீங்கள் சொல்லும் நடுநிலையாளர்கள், நடுநிலையாளர்களா?////
    நாங்கள் நடுநிலையாளர்களை சொன்னால் அவர்கள் நடுநிலையாளர்களா என்பது உங்களுக்கு பிரச்னையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே ,நீங்கள் ஏற்கனவே சொல்லியிருந்த,ஒப்புக்கொண்ட நடுநிலை தவ்ஹித்வாதிகளை அழைத்து வாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன் .மேலும் அந்த நடுநிலை தவ்ஹித்வாதி உண்மையான தவ்ஹித்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களைப் போல் நாங்களும் உண்மையான தவ்ஹித்வாதிகளாக மாறிவிடவும் ஆசைபட்டே அவ்வாறு கூறியுள்ளேன். எங்களுக்கு குறிப்பிட்ட தனி நபர் காழ்ப்புணர்வு காரர்களை தவிர மற்ற அனைவர்களும் நடுநிலையாளர்களே ,அதாவது தலைவர் ,வைஸ் உதுமான்;பொருளாளர் அபுல்ஹசன் உட்பட

    பதிலளிநீக்கு
  6. தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். நீங்கள் நல்லவராக இருந்திருப்பின் என்ன எழுதினாலும் பரவாஇல்லை, உங்கள் மேல் ஒரு சிறு கலங்கத்துக்கும் அனுமதியோம். தவறு செய்பவராக இருந்து இப்படி எழுதிவருவது தான் பிரச்சினையே. உங்களிடம் கேட்ட கள்ளகுடிகாரர்களின் பெயர்களை வெளியிடவில்லையே. நாங்கள் கூறிய விசயத்தில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் எழுத்துபூர்வமாகவாவது நீங்கள் உங்கள் சத்தியத்தை பதிவுசெய்து உங்கள் தூய்மையை நிரூபிக்கலாம். நன்றி, தவறியிருப்பின், நாங்களும் உங்கள் நிலை அறிய,எழுத்துக்களாக சத்தியத்தை எதிர்பார்த்து.....

    பதிலளிநீக்கு
  7. ஆலிம் மீது கல் எரியவில்லை என்று சத்தியம் செய்ய அல்-ஐன் சலீம் அவர்கள் முன் வருவாரா என்று தான் கேட்டோம். உங்களை சத்தியம் செய்ய சொல்லவே இல்லை. உங்களுக்கு தான் பொய்சத்தியம் செய்வது சக்கரைபொங்கல் சாப்பிடற மாதிரி தானே. சலீம் அவர்கள் நல்ல மனிதர்,அல்லாஹ்விற்கு அஞ்ச கூடியவர், உங்களை போன்று பொய் சத்தியம் செய்ய மாட்டார் என்பாதால் தான்.முதலில் நீங்கள் இந்த விசயத்தை சலீம் அவர்களிடம் சொல்லாமல் ஏன் மறைக்கிறீர்கள்? அவருக்கு தெரியப்படுத்துங்கள். இப்படி தான் நீங்கள் செய்யும் பல விசயங்களை நிர்வாகிகளுக்கு தெரியாமல் மறைத்து அவர்களை ஏமாற்றுகிறீர்கள். போயும், போயும் உங்களை நம்பி ஏமாறுவதை நினைத்து பார்த்தால் சில சமயம் உங்களுக்கே சிரிப்பு வருமே. சிரியுங்கள். ஏமாறுகிறவன் தலைவிதி என்ன செய்யது. அதற்க்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

    பதிலளிநீக்கு
  8. பண்ணைவாசிகள் என்ற பெயரில் வரும் செத்த பாம்பே,பொக்கை வாய்க் கிழவி பக்கத்துக்கு நாலு குறை சொல்லுவாளாம்.அதைப் போல் வாயில் வந்ததையெல்லாம் குற்றம்சாட்டுவாய்.நான் அதற்கு ஒவ்வொருவராக அழைத்து வந்து உங்களிடம் சத்தியம் செய்ய வைக்க வேண்டும்.மூதேவி ,முத்துமாரி,குற்றச்சாட்டு சொல்லுபவர் அல்லவா முதலில் ஆதாரம் வைக்க வேண்டும்.உங்க குற்றச்சாட்டை நிருபிக்க நீங்கள் முதலில் சத்தியம் செய்யுங்கள்.அதை மறுக்கும் வண்ணம் அப்புறம் நாங்கள் சத்திய ஏற்பாடு செய்வோம்.
    கள்ளக் குடி கொண்ட செத்த பாம்புகளே ,கல் எறிந்ததை பார்த்தது உண்மை என்றால் சத்தியம் செய்ய உங்களுக்கு என்ன தயக்கம்?

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.