1 Feb 2013
மும்பை:2005-ஆம் ஆண்டு பா.ஜ.க மூத்த தலைவரும், பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியுமான எல்.கே.அத்வானியும், ஹிந்துத்துவா சங்க்பரிவார தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களும் பாகிஸ்தானில் இயங்கும் தாலிபான் ஆதரவு தலைவரான ஃபஸலுர் ரஹ்மானுடன் ரகசிய சந்திப்பை நடத்தியதாக
தேசியவாத காங்கிரஸ் கட்சி திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
இதுக் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியது:பாகிஸ்தானில் எதிர்கட்சி தலைவரான ஃபஸலுர்ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். அப்பொழுது டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலகத்தில் வைத்து எல்.கே.அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் சந்திப்பை நடத்தினார்.
அந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பதுக் குறித்து இதுவரை வெளிப்படுத்தவில்லை. 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சந்திப்பு நடந்தது. அப்பொழுது எல்.கே.அத்வானி எதிர்கட்சி தலைவராக இருந்தார். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில் மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் 3 மணி நேரம் நடந்தது.
இவர்கள் இடையே என்ன பேசினார்கள்? என்பதுக் குறித்து அறிய பொதுமக்கள் விரும்புகின்றனர். அதனை வெளியிட சங்க்பரிவார தலைவர்கள் தயாராக வேண்டும். தீவிரவாதத்தை பா.ஜ.க அரசியல் மயமாக்கி வருகிறது. பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியான பிரக்யாசிங் தாக்கூரை சிறையில் சென்று சந்தித்துள்ளார். இவ்வாறு நவாப் மாலிக் கூறியுள்ளார்.
3 0 0 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.