வெள்ளி, 29 ஜூலை, 2011




vedikkai rasikan சொன்னது…







ஸ்டேசனில் வைத்து ஒருவர் உங்களைப் பார்த்து அதிகம் பொய் சத்தியம் பண்ணக் கூடியவர் என்று சொன்னதற்கு தாங்கள் சரியான பதில் சொல்ல வில்லை என்று அதைக் கேட்ட மற்றொருவர் சொன்னார்.உண்மைதானா?

வேடிக்கை ரசிகனே!நான் அவருக்கு உடன் பதில் சொன்னேன் ,நான் பண்ணிய ஒரு பொய் சத்தியத்தை சொல்லுங்கள் என்றேன் [பன்மையில் சொல்ல வில்லை ஒருமையிலே சொன்னேன் அது தவறு எனபது வேறு விஷயம்].அதற்கு அவர் அது நிறைய இருக்கிறது என்றுதான் சொன்னார்.இப்போது உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமானால் ,அவர் நல்லவராக இருந்தால் ,அவர் உண்மையாளராக இருந்தால் ,அவர் நான் பண்ணிய ஒரு பொய் சத்தியத்தை நிருபிக்கட்டும் நான் தவ்ஹித் ஜமாத்திலிருந்தே விலகி விடுகிறேன்.அவர் நிருபிக்க வருவாரா?




saifullah(sword of allah) சொன்னது…







நோட்டீஸ் கொடுத்த விவகாரத்தில் நமது பள்ளியில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அடிக்கவில்லை என்று பொய் சத்தியம் செய்ததை மறந்து விட்டீர்களா .இதற்கு ஆதாரம் நடுநிலை தவ்ஹீத்வாதிகள் .

arasan சொன்னது…



neengkal anru anaivarin munnilaiyilum poisattiyam sollavillai enru ippozhuthu sathiyam seiveerkalaa?
நான் அன்று அனைவரின் முன்னிலையிலும் பொய் சத்தியம் பண்ணினேன் என்று நீங்கள் சத்தியம் பண்ண வாருங்கள்.நானும் அன்று அனைவரின் முன்னிலையிலும் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று சத்தியம் பண்ண வருகிறேன் ,எங்கு எப்போது வரவேண்டும்.?ஆமாம் ,குல்லாவின் வால் அறுந்து மீண்டும் அரசன் அரேங்கேரிய ரகசியம் என்ன? முனாபிக் சைபுல்லா தன் ஆட்டத்தை காட்டிவிட்டதால் அந்த பெயர் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக வா?
அப்புறம் நடுநிலை தவ்ஹித் வாதியின் சாட்சி என்னவாயிற்று?


புதன், 27 ஜூலை, 2011

////நீங்கள் சுத்த அக்மார்க் யோக்கியராக இருந்தால் நாங்கள் கூறும் குற்றங்களுக்கு வரிக்கு வரி பதில் சொல்லுங்கள் பார்ப்போம்
கள்ளத்தனமாக எங்கள் கருத்துரையை நீக்கிவிட்டு யோக்கியன் போல் பேச வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் ..ஆறாம்பண்ணை தவ்ஹீத் வாதிகள்///
கள்ளத்தனமாக எனது பிளாக்கரில் நுழைந்து விட்டு அடுத்தவர்களை கள்ளத்தனம் என்று சொல்லுவதற்கு முதலில் நீங்கள்  வெட்கப் பட வேண்டும்.அடுத்து நீங்கள் உண்மையான ஆறாம்பண்ணை  தவ்ஹித் வாதிகளாக இருந்தால் ,கிளை தலைவரிடம் என் மீதுள்ள குற்ற சாட்டுகளை கூறியிருக்க வேண்டும்அவர் முதலில் என்னிடம் அந்த குற்றச்சாட்டுகள் பற்றி என்னிடம் விசாரித்து ,அதில் திருப்தி அடைந்தால் எனது பதில்களை உங்களிடம தெரிவித்துருக்க வேண்டும் .என்னுடைய பதில்களில் திருப்தி அடையாவிட்டால் என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை தலைமைக்கு அனுப்பியிருக்க வேண்டும் ."நம் உணர்வு"என்று சொல்லக்கூடியவர்கள் நம் கிளையிடம் சொல்லாமல் ,அடுத்தவர் பிளாக்கில் கள்ளத்தனமாக நுழைந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவது சரியா? முனவ்விருளுக்கு அரசனுக்கு மார்க்க ,மற்றும் ஊர்,ஸ்கூல் மற்றும் பொது விசயங்களில் பதில் சொன்னேன் .அதில் சொந்த வியாபார விசயத்தில் தலை யிட்டவனுக்கு பதில் சொன்னது போல் உங்களுக்கு பதில் அளிக்காமல் கண்ணியமாகவே பதில் தந்துள்ளேன்.உங்களது மெயில் ஐடி அனுப்பினால் உங்களது குற்றச்சாட்டுகளுக்கு நான்  பதில் அனுப்புகிறேன்.மெயில் ஐடியை வைத்து உங்களை கண்டு பிடிக்க முடியாது.சைபர் க்ரைமில் புகார் அளித்தே கண்டு பிடிக்க முடியும் ஆகவே மேலும் தயக்கம்  இல்லாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்தவர்களாக ,உங்களது குற்றசாட்டுகளுடன் மெயில் ஐடியையும் அனுப்புங்கள்.

புதன், 20 ஜூலை, 2011

முத்தான கருத்துக்களை குத்து,குத்தாக,,,,,,கேள்வி 6

நமதூர் ஜமாத்தின் தன்மானத் தலைவர் ஆலிஜனாப்.வைஸ் உதுமான் அவர்கள் முரப்பநாடு போலிஸ் ஸ்டேசனில் பல முத்தான கருத்துக்களை குத்து,குத்தாக உதிர்த்தாலும் அவற்றில் முக்கியமான ஒன்று என்ன வென்றால் இரண்டாவது ஜமாத்து ஊருக்கு ஆகாது என்பதாகும்.


1.அவ்வாறெனின் எல்லா ஊரையும் போல் நமதூரிலும் கள்ளத்தனமாக விபச்சாரம் நடக்கிறதே அது ஆகுமா?
அந்தக் கால பெரிய மனிதர்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை எத்தனை பேர்களை சொல்ல வேண்டும்? 
2.பள்ளிவாசலில் வரதட்சணை கல்யாணம் நடை பெறுகிறதே அது ஆகுமா?
.இறை மறைக்கு முற்றிலும் உல்டாவாக ,இந்திய அரசியல் சட்டத்தின்படி ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடிய, பல ஏழை பெண்களின் இல்வாழ்க்கைக்கு எதிரான வரதட்சணை கல்யாணங்கள் பள்ளியில் நடக்கிறதே அது ஆகுமா?
எந்த இறைவன் மகர் கொடுக்க சொன்னானோ அந்த இறைவனுக்கு மாற்றமாக அந்த இறைவனுடைய பள்ளியிலே வரதட்சனை கல்யாணம் பதிவு செய்யப் படுகிறதே அது மட்டும் ஆகுமா? 
3. தெருவெல்லாம் கந்து வட்டிக்காரர்கள் வலம் வருகிறார்களே.வட்டித் தராதவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு பேசுகிறார்களே ,வட்டி இஸ்லாத்தில் கடுமையாக கண்டிக்கப் பட்டிருக்கும் போது, அது பற்றி கண்டும் காணாமல் இருப்பது மட்டும் ஊருக்கு ஆகுமா?
4,நமதூரில் குறைந்தது முன்னூறுக்கும் குறையாது ஆண்கள் உள்ளூரிலே இருப்பார்கள்.ஆனால் தினசரி ஒவ்வொரு வக்துவுக்கும் தொழுகைக்கு வருபவர்கள் எத்தனை பேர்?மக்ரிப் ,இசா நீங்கலாக முப்பது பேருக்கு மேல் இருக்காது.தொழாதவர்கள் பற்றிய வசனங்களும் ஹதீத்களும் நரக வேதனைகளை கடுமையாக சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் நமதூரில் என்பது சதவீதத்தினர் தொழுகைக்கு வருவது இல்லை செயலாளர் ,மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட . நாம்,' வைஸ் அவர்களை கேட்பது இது ஊருக்கு ஆகுமா?
 5.இத்தளத்தில் முன்பு கருத்து தெரிவிக்க வந்தவர்கள் ,பள்ளிவாசல் நிர்வாக ஆதரவாளர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை குடிகாரர் என்று கூறியபோது ,நான் கள்ள குடிகாரர்கள் பற்றி தெரிவித்திருந்தேன் .அப்போது கள்ள குடிகாரர்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?என்று கேட்டார்கள்.நான் குடிக்கவில்லை என்று பள்ளிக்கு  வந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்ய வாருங்கள் என்று அழைத்த சமயத்தில் பதில் இல்லாமல் ஓடிவிட்டார்கள். ஒருமுறை அல்ல இரு முறை.மேலும் சில இடங்களில் மது பாட்டில்கள் அதிகமாக கிடக்கின்றன.அவ்வாறெனின் இத்தனை குடிகாரர்கள் இருப்பது ஊருக்கு ஆகும் ,இரண்டாவது ஜமாஅத் மட்டும் ஊருக்கு ஆகாதா?[தொடரும் இறையருளால்]
6. நபி [ஸல் ]அவர்கள் தனது கப்ருவை விழா கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள் ,இசைக்கருவிகளை முறியுங்கள்,என்று சொல்லியிருக்க ,இரண்டு கிளை கப்ருகளிலும் விழாவை ஏற்படுத்தி ,ரசுலுல்லாஹ்வே!நீங்கள் இசையை ஹராம் என்றா சொன்னீர்கள் ,நாங்கள் அந்த இசையை ஆபாச சினிமா இசையை ,பாங்கொலியை மீறியும் தொழுகையை சட்டை  செய்யாது தெருவெல்லாம் முழங்கி வருவதோடு இறை நிராகரிப்பை பகிரங்கமாக செய்து வருவது ஊருக்கு ஆகுமா?

சனி, 16 ஜூலை, 2011

.நாங்கள் குற்றம் சுமத்தி அனுப்பிய கருத்துரைக்கும் இதே போல் உங்கள்; சிகப்பு வரிகளால் வரிக்கு வரிக்கு பதில் சொல்லியுருக்க வேண்டியது தானே .ஏன்
எதற்குமே பதில் இல்லை .சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் !அவசர அவசர மாக அந்த கருத்துரையை
நீக்கி விட்டு நல்ல பிள்ளை போல் வேஷம் போட வேண்டாம் .அந்த கருத்துரையை நீக்காமல் இருந்திருந்தால் ஆறாம்பண்ணை மக்களே உங்களை குற்றங்களை ஆதாரத்துடன் நிரூபிப்பார்கள்

நான் எனது இரண்டு வீடுகளை பூட்டியிருந்தேன் .யாரும் வந்தால் பெல் அடித்தபிறகு திறக்கலாம் என்று .
ஆனால் இன்னொரு வீட்டை பூட்ட மறந்துவிட்டேன் .அதில் திருட்டுத்   தனமாக நுழைந்த ஒருவரை வெளியே தள்ளி கதவை மூடினேன் .ஆனால் அந்த திருடன் சொல்லுகிறான் ,"நான் நல்லபிள்ளை வேஷம் போடுவதாக "

தவ்ஹித் வாதிகள் தங்களை முன்னிறுத்தியே வாதங்களை வைப்பார்கள் அதனால் எனது அடையாளத்துடன் இந்த பிளாக்கரை ஆரம்பித்துள்ளேன்..ஆனால் இந்த பிளாக்கரைப் பற்றி குறை கண்டுள்ள ஒருவர் தன்னை யாரென்று சொல்லாமல் ஒரு பிளாக்கர் ஆரம்பித்துள்ளார்.அதில் நீங்கள் குற்றம் சுமத்தி அனுப்பியுள்ள கருத்துரைகளை பதிவு செய்யுங்கள் .கருப்பு எழுத்துக்களாலே உங்களை கதி கலங்க வைக்கிறேன். ஏனெனில் சில நண்பர்கள் இங்கே கடும் சொற்களை தவிர்க்குமாறு வேண்டியுள்ளனர் சட்டியும் இருக்கிறது ,சட்டியில் சாப்பாடும் இருக்கிறது ,ஆப்பையால் அள்ளி போடுவதற்கு பிளேட்டைக் காணோம் 
"அல்லாஹ் இப்படி கள்ள தாவ பண்ண சொன்னதாக
நான் அறியவில்ல்லை". என்று கூறுகிறீர்கள் .எது கள்ள தாவா?நாங்கள் எங்கள் பெயரை வெளியிடாததா ?நம் ஜமாஅத் பத்திரிக்கை உணர்வின் ஆசிரியர் பேர் இறை நேசன் என்று தான் குறிப்பிட பற்றிக்கிறது ,பொயயண்டீஜே இணையதள ஆசிரியரும் அபு யூசூப் என்று புனைபெயரில் தான் எழுதுகிறார் ஏன் பி.ஜே.அந்நஜாத் பத்திரிக்கையில் பல முறை அபு நபீலா உள்பட பல பெயரில் கட்டுருகளை எழுதியிருக்கிறார்
நம் ஜமாஅத் பத்திரிக்கையின் உணர்வின் ஆசிரியர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அபு நபிலா பீஜே என்று அனைவருக்கும்  தெரியும்.மேலும் அந்நஜாத்தில் இருந்து பீஜே விலகியது 1986  இல் .நபிலா என்ற அவர் மகள் பிறந்தது 1990  க்கு பிறகு .ஆக உளறி கொட்டவேண்டாம். அவர்கள் என்ன புனை பெயரில் எழுதினாலும் தங்களை அடையாளம் காட்டியிருந்தனர்.மேலும் அடுத்தவர்கள் பற்றி அவதூறுகளை கூறும்பொழுது ஆதாரம் காட்டியிருப்பார்கள் அப்போது பாக்கர் சைபுல்லா பற்றியெல்லாம் பேசியவர்கள் தற்போது கைவிட்டது ஏனோ? மேலும் கள்ளப் பெயரில் எழுதுவது பற்றி பீஜே எழுதியதை தேடித்தருகிறேன்.
சில சந்தர்ப்பங்களில் நமது பெயர் வெளியிட முடியாத நிலை ஏற்படும் . உங்கள் மீது விசாரணை வைக்கப்பட்டால் நேரிடையாக ஆதரங்களுடன் வருவோம் .
கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் மலையேறி வானத்தை பிளக்கப் போவதாக சொன்னானாம்.
" அடுத்தவர்கள் மீது அபாண்டம் கூறி ஆதாரம் கேட்டால்
ஓடுபவன் அயோக்கியனாகவே இருக்க வேண்டும்". என்று சொல்கிறீர்கள் நாங்கள் தான் அபாண்டம் கூறும் அயோக்கியர்கள்
நீங்கள் சுத்த அக்மார்க் யோக்கியராக இருந்தால் நாங்கள் கூறும் குற்றங்களுக்கு வரிக்கு வரி பதில் சொல்லுங்கள் பார்ப்போம்
கள்ளத்தனமாக எங்கள் கருத்துரையை நீக்கிவிட்டு யோக்கியன் போல் பேச வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் ..ஆறாம்பண்ணை தவ்ஹீத் வாதிகள்
கள்ளர்களே .திறந்த வீட்டில் ........நுழைந்து விட்டு ,இப்படியெல்லாம் பேசுவது நியாயமா?எனது பிலாக்கரிலாவது ஐடி இல்லாமல் கருத்துரை வழங்க முடிகிறது.ஆ.வாசிகள் குரூப்பில் உங்களால் நுழையவே முடியாது.புதிதாக ஆரம்பித்த தளத்திலும் ஐடி இல்லாமல் கருத்துரைக்க முடியாது .அதுதான் தவ்ஹித் ஜமாத்தில் ஆதாரம் கொடுக்கப் போவதாக கூறியுள்ளீர்களே ,நான் இப்போது துணைதலைவராக உள்ளேன் .நீங்கள் ஆதாரத்தை கொடுத்து என்னை நீக்கிவிட்டு துணைதலைவராக நான் உங்களை வழிமொழிகிறேன்.நீங்கள் உங்களைப் போன்ற கள்ளப் பேர்வழி களுக்கென்று தனி வெப்சைட் ஆரம்பித்துள்ளார் ஒருவர் அதில் நான் ஒன்றும் நீக்க முடியாது. ஆகவே அங்கு நீங்கள் எனது குற்றசாட்டுகளை பதிவு செய்து வையுங்கள் .பின்னர் நீங்கள் சொன்னதைப் போன்று நான் அக்மார்க் யோக்கியன் என்பதை நிருபிக்கிறேன்.  .இன்சா அல்லாஹ் 

வெள்ளி, 15 ஜூலை, 2011

அன்புச் சகோதரர் இபுராஹிம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஆறாம்பண்ணை தவ்ஹீத்வாதிகள் மீண்டும் எழுதுவது ,
உங்களை இழிவு படுத்த வேனுமேன்றோ அல்லது உங்களை
தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து அப்புரபடுதவேண்டுமேன்றோ
என்ற எண்ணத்தில் முன்னர் கூறியவைகளை எழுத வில்லை .
நீங்கள் தவ்ஹீத் ஜமாதிர்க்காக உங்கள் காலத்தையும்பொருளாதராதையும்
  எவ்வளவு செலவ்ழிதுல்லீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் .
ஆனால் நீங்கள் செய்யும் வெளிப்படையான தவறுகளால் மற்றவர்களால்
நம்முடைய ஜமாஅத் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது .
 நீங்கள் தவ்ஹித்  ஜமாத்தை சேர்ந்தவர்களா?அல்லது 
தவ்ஹித் ஜமாத்தை ஒழிப்பதற்கு தவ்ஹித் வேடம் போடும் 
கபடதாரிகளா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.
மற்றவர்களால் தவ்ஹித் ஜமாத்தும் சகோதரர் பீஜே அவர்களும் 
மிகக் கடுமையாக விமர்சிகப்படுகிரார்கள் அவைகளையும் அப்படியே 
ஏற்றுக் கொண்டீர்களா?                                                                                                                                                                    இதனை பொறுத்து கொள்ள முடியாமல் தான் அந்த குற்றங்களை 
உங்களிடம் பதிவு செய்தோம்.
நீங்கள் நேர்மையாளராக இருந்தால் 
நேரடியாக அல்லது வேறொரு சகோதரர் மூலமாக 
அந்த குற்ற சாட்டுகள் பற்றி என்னிடம் அல்லவா 
கேட்டிருக்க வேண்டும் ?

குற்றங்கள் பதிவு செய்தவர்கள் ஆதாரத்தை ஏன் பதிவு செய்யவில்லை?
தவறு செய்வது தவ்ஹீத் வாதியாக இருந்தாலும் சுட்டிகாட்டுவது நம் கடமை.
சாட்சிகள் இல்லாமல் ஆதாரம் இல்லாமல் மறைமுகமாக சுட்டிகாட்டுவது
தவ்ஹித்வாதியின் செயல் அல்ல
பாக்கர் சைபுலாஹ்காஜா போன்றபெருந்தலைகள் மீதே அவர்கள் செய்த
தவறுகளின் காரணமாக நம் ஜமாஅத்
நடவடிக்கைஎடுத்து அவர்களை நீக்கியதன் மூலம் நம் ஜமாத்தின் தூய்மையை
நீங்கள் அறிவீர்கள்.
உங்களைப்போல்  கள்ளமுகம்  காட்டி  பாக்கர்   
விசாரிக்கப்பட  வில்லை.பீஜெவுடன் மிக நெருக்கமாக 
இருந்த பாக்கர்  வீடியோ பதிவுடனே விசாரிக்கப் பட்டார்

பாக்கர் சைபுல்லாவுடன் என்னை ஒப்பிட்டதற்கு மிகவும் 
வருந்துகிறேன் அவர்கள் தவ்ஹித் ஜமாத்தால் ஆதாயம் அடைந்தவர்கள்.
நான் தவ்ஹித் ஜமாத்தால் நான் ஒரு நய பைசாகூட ஆதாயம் 
அடையவில்லை. எதையெல்லாம் நான் இழந்திருக்கிறேன் என்பதை நான் 
இங்கு சொல்ல விரும்பவில்லை.பாக்கர் மீதும் சைபுல்லா மீதும் 
ஆதாரத்துடன் நேரடியாக குற்றங்கள் சொல்லப்பட்டு அவர்களிடம் 
விளக்கங்கள் கேட்டு அவைகள் நிருபிக்கப்பட்ட பின்னர் நீக்கப்பட்டனர்.
பெருந்தலைகள் மீதே நேரடியாக குற்றம் சுமத்தப் பட்டபோதும் 
விளக்கங்கள் கேட்கப் பட்டிருக்கும்போது சாதாரண என் மீது   
மற்றவர்களின் ஆதாரமற்ற குற்றசாட்டை வைத்து   
கருத்துரைர்த்திருப்பது அபாண்டம் அல்லவா?  .
தவறை சுட்டிகாட்டுபவரின் 
ஊரோ பேரோ அவசியம் இல்லை அவர் சுட்டி
காட்டும் தவறுகள நம்மிடம் உள்ளதா ?என்பதை மட்டும் எண்ணிப்பாருங்கள் .
எந்த ஒரு தவறுகளுக்கும் குற்றசாட்டுகளுக்கும் இரண்டு ஆண் சாட்சிகள் 
வேண்டும் என்று குர்ஆன் கூறியிருக்க ஊரோ பேரோ அவசியமில்லை 
என்பது உங்கள் கருத்தென்றால் குரானுடன் முரண்படும் உங்களை நான் 
என்னவென்று சொல்லுவது? உங்களை திருத்தி கொள்ளுங்கள் .
அதைவிட்டு விட்டு விசாரணைக்கு தயார் என்றெல்லாம் மழுப்ப 
வேண்டாம் ."விசாரணைக்கு தயார் என்பது மழுப்பல்"நேர்மையாளர்கள் 
சொல்ல மாட்டார்கள்    தவ்ஹீத் ஜமாத்தின் விசாரணையில் இருந்து 
வேண்டுமானால் நீங்கள் தப்பித்து விடலாம் .ஆனால் அல்லாஹ்வின் 
விசாரணை கடுமையானது.அந்த விசாரன்யில் இருந்து நீங்கள் தப்ப முடியாது 
என்பதை உணருங்கள்.அல்லாஹ் இப்படி கள்ள தாவ பண்ண சொன்னதாக 
நான் அறியவில்ல்லை. நாங்கள் கூறியது அபாண்டம் என்கிறீர்கள் .
அப்படியானால் அந்த அபாண்டதிர்க்கு உங்களிடம் பதில் இருக்குமேயானால் 
இணையத்திலே அதற்க்கு பதில் கூறிவிட வேண்டியதுதானே .எதற்க்காக 
எங்களது கருத்துரையை நீக்கினீர்கள்.மீரா ஸ்கூல் சம்பந்தமாக எத்தனையோ 
பேர் தங்களின் உண்மை பேரை சுட்டிக்காட்டாமல் புனைபேரில் 
(முனவ்விருள் ,அரசன் இப்படி பல பேரில் ] வந்து உங்கள் மீது குற்றம் 
சுமத்தினார்கலே அவர்களுகெல்லாம் உங்கள் தளத்திலே பதில் கொடுதிர்கலே .
அவர்களின் உண்மையான பெயரை ,யார் எவர் என்பதைஎல்லாம் கேட்டுதான் 
பதில் கொடுத்தீர்களா ?மீரா ஸ்கூல் விசயத்தில் நீங்கள் உண்மையாளராக 
இருந்ததால் உங்களால் பதில் சொல்ல முடிந்தது .ஆனால் நாங்கள் 
சுட்டிகாட்டும் விசயங்கள் அனைத்திலும் நீங்கள் சம்பந்தபடிருப்பதால் 
உங்களால் பதில் சொல்ல முடியவில்லை.அவர்கள் தவ்ஹித்வாதிகள் 
அல்லர் அவர்கள் எப்படிவேண்டுமானாலும் குற்றம் சொல்லுவார்கள் 
அவர்களுக்கு நபிசல் அவர்கள் காட்டித் தந்த நடைமுறைகள் ஒரு 
பொருட்டல்ல .பக்கத்து வீட்டுக்காரன் குற்றம் சொன்னால் தெருவில் 
நின்றுதான் சண்டை பிடிக்க முடியும் .ஆனால் வீட்டுக்குள்ளே குற்றசாட்டு 
வந்தால் அதற்கு தெருவில் நின்று பதில் சொல்லமாட்டார்கள்.ஆதலால் 
உண்மையை மூடி மறைக்க முயலவேண்டாம் .தவ்ஹீத் ஜமாத்தை விட்டு 
உங்களை நீக்குவதால் மட்டும் உங்கள் பாவங்கள் மன்னிக்க பட போவதில்லை.                                    அல்லாஹ்வின் உரிமைகளை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்..
நீங்கலாக மனம் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் .                                                          அஷ்தஹ்பிருல்லாஹி  வ அத்தூப இளைஹீ என்று நபி[ஸல்] அவர்கள் 
தினசரி எழுபது தடவை  சொல்லுமாறு கூறியுள்ளார்கள் ஆதமுடைய மக்கள் 
அனைவரும் தவறு செய்பவர்கள்தான் என்பது நபி மொழி தான் உட்பட 
அனைத்து மக்களையும் பாவ மன்னிப்புக் கோருமாறு நபி[ஸல்] அவர்கள் 
கூறியுள்ளார்கள் ஆகவே பாவ மன்னிப்பு என்பது எனக்கு மட்டும் அல்ல. 
உங்களுக்கும் உண்டு.என் மீது கூறிய அபாண்டத்தை நிருபிக்காதவரை 
என் மனதை வேதனை படுத்திய பாவம் உங்களுக்கும் உண்டு. 
அதை விட்டு விட்டு உங்கள் வாத திறமையால் குற்றங்களை மறைக்க 
முயல வேண்டாம் .இனிமேல் இந்த விஷயத்தை பற்றி நாங்கள் பேச 
போவதில்லை அடுத்தவர்கள் மீது  அபாண்டம் கூறி ஆதாரம் கேட்டால் 
ஓடுபவன் அயோக்கியனாகவே இருக்க வேண்டும்..
நீங்கள் எங்களின் சகோதரன் என்ற அடிப்படையில் தவறுகளை 
சுட்டி காட்டினோம் .உங்கள் சகோதரனுக்கு இப்படி கள்ளத்தனமாகத்தான் 
குற்றம் சட்டுவீர்களா?அவ்வளவுதான் ஆனால் உங்களால் தொடர்ந்து 
ஜமாத்திற்கு கெட்டபெயர் ஏற்படுமென்றால் எங்களின் நிலைபாட்டை
மாற்றிகொள்வோம்.இங்கே உங்கள் சுய ரூபம் வெளிப்படுகிறது.
வழக்கபோல பழைய குருடி கதவை திறடி கதைதான் இங்கும்.
நீங்கள் உண்மையான தவ்ஹித்வாதியாக இருந்தால் எனக்காக 
உங்களது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளமாட்டீர்கள் .உங்களது 
தீவிர நேர்மையான நடவடிக்கைகளால் தவ்ஹித் ஜமாஅத் எழுச்சியுற 
வேண்டும் அதைக் கண்டு நான் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் 
எனது துவாவும் கூட .பல சோதனைகளையும் வேதனைகளையும் 
தாங்கிக்கொண்டு வாழ்வில்   51  ஆண்டுகளை கடந்துவிட்ட எனது 
செயல்களில் தவறுகள் நடந்திருக்கலாம்.உங்களைப் போன்று நான்
நூறு சதவீத யோக்கியனோ புண்ணியவாளன் அல்ல. புண்ணியவான் 
ஆகிய உங்களை பார்த்து நான் திருந்திக் கொள்ளவேண்டும் என்றுதான் 
உங்களை காண ஆசைப்பட்டேன்.ஒரே ஆளாகிய என்னால் மட்டும் 
தவ்ஹித் ஜமாத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுமானால் ஆறாம்பண்ணை 
 தவ்ஹித்வாதிகள் என்று குறிப்பிட்டுள்ள நீங்கள் பலர் அல்லவா/
ஆக பலராகிய  நீங்கள் நேர்மையாக நடந்து உங்களது நேர்மை திறனால் 
தவ்ஹித் ஜமாத்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்தலாமே.அதை 
செய்ய தவறிவிட்டு இங்கு உரலை இடிக்க வந்தது என்?  
ஆகையால் இனியாவது உங்கள் பொதுவாழ்க்கையை தூய்மை 
படுத்திக்கொண்டு ஜமாத்தில் நீடியுங்கள் .அல்லாஹ் அனைவருக்கும் 
நேர் வழி காட்டுவானாக வஸ்ஸலாம் உங்களது கள்ள ஆலோசனை 
எனக்கு தேவை இல்லை.மேலும் மாவட்ட பொருளாளர் பணியை 
என்னால் சரிவர செய்யமுடியவில்லை என்று கடந்த மூன்று 
மாதங்களுக்கு முன்பே நான் விலகுவதாக மாவட்ட நிர்வாகிகளிடம் 
நான் கூறி கடந்த மாதமே விலகல் கடிதம் கொடுத்து விட்டேன்.எனக்கு 
இந்த பதவி ஒரு பொருட்டல்ல.மேலும் நான் போட்டியில்லாமல் 
தேர்ந்தெடுக்கப் பட்டவன் என்பதை உண்மை தவ்ஹித்வாதியாக 
இருந்தால் அறிந்திருப்பீர்கள். . .                                                                                                                           அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக 
நேர்மைதிரங்களையும வெளிபடுத்துவானாக   

உங்கள் முதல் பதிவின் கடைசி பகுதி மூலம் உங்கள் 
உள்ளத்தில் உள்ள காழ்ப்புணர்வுகளை நான் நன்கு அறிவேன்.




ஞாயிறு, 10 ஜூலை, 2011

நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா

Friday, April 29, 2011 10:12 PM Posted by பொய்யன் டிஜே

மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?அடுத்த  ஆண்டு ஆறாம்பண்ணை சிந்தாதர்கா கலீபாவும் விழா கமிட்டியினரும் நாகூர் கலிபாவை விட சிறந்த குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தினரின் மூக்கை உடைப்பார்களா? 


திங்கள், 4 ஜூலை, 2011

அண்ணே அண்ணே துப்பாய் அண்ணே

அண்ணே அண்ணே துப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சி அண்ணே
அதே சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு [அண்ணே அண்ணே]

கயத்தாறு ஊர்லே கல்யாணமாயிடுச்சி
ஒரு மாசத்திலே நாலு மாசமாச்சு
ஆராம்பன்னையா இப்படி ஆச்சு
கயத்தாறு ஜமாத்து கேட்டுபுடுச்சி
மேளம் இல்லாமல் பாட்டு கேக்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
கணவன்  இல்லாமல் குவா குவா கேக்குது
அதுல எங்க நோட்டம் இருக்குது!
ஆளு யாருன்னு கேக்க போனோம் ,
கேடிசி காரன்னுச்சி அண்ணே!
[அண்ணே அண்ணே]

அவங்க அவங்க இஷ்ட்டம் போலே
பதினாலு அதிகாரம் பண்ணுறாங்க
 
ஆளுக்குஆளு அடிக்கிறாங்க 
ஆளும்கட்சி பசீரையுங்க .
ஆளும் பள்ளி மெம்பரையும் அடிச்சிபுட்டாங்க
மேடு பள்ளம் இல்லாம பழகுறாங்க 
அவங்க கூட சேந்து தண்ணி அடிச்சா
இந்த கதி எல்லாருக்குமுங்க [அண்ணே அண்ணே ]

பத்து  பேரை  கூட்டிப்  போயி
பொத்து பொத்துன்னு போட்டுத் தள்ளாம
பக்கத்து ஊரைவைத்து 
பஞ்சாயத்து பேசுறாங்க [அண்ணே அண்ணே ]  

சனி, 2 ஜூலை, 2011


ஆ.செ.பா.தர்கா கொடி ஊர்வலத்தில் கடுமையான கூட்டம் .தர்காகமிட்டியினர் மிகுந்த ஆராவாரம் .கண் கொள்ளாகாட்சிகண்டு கு.க கூமு மற்றும் சிங்க்சிங் கடும் மகிழ்ச்சி ,உள்ளத்தில் எழுச்சி இன்னும் அதிகமாக விசேச நிகழ்ச்சிகள் வைக்க வேண்டும் என்று நேர்த்தி செய்து கொண்டார்கள்.அங்கு வேடிக்கை பார்க்க வந்திருந்த ஒரு மாற்று மதத்தவர் அடுத்த ஆண்டு கொடிக்கட்டு அன்று எங்களது கோவிலில் கொடைவிழா நடத்தி ,பிரபலமானவர்களைக் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துகிறோம் கூட்டம் எங்கே அதிகமாக வருகிறது என்று பார்ப்போமா? என்று சவால் விட்டார்.ஆர்பரித்த சிங்க்சிங் அடங்கிப் போனார்.