ஞாயிறு, 30 அக்டோபர், 2011

திமுகவுக்கு எத்தனை ஓட்டுக்கள் ?

நமது ஊரில் திமுக எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்றால் ஒரு 
காலத்தில் லாஇலாஹா இல்லல்லாஹ் ;அண்ணா ரசூலுல்லாஹ் என்று ஒருவர் கூறியதாக சொல்லப்படும் அளவுக்கு அதன் ஆழம் படிந்திருந்தது. அண்ணா இறந்த சமயத்தில் மவுன ஊர்வலம் மூன்று தெருக்களையும் வலம் வந்தது.நான் அறிந்த வரையில் 1971  தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய குடும்பத்தினரை தாக்க முயற்சித்தனர்.அப்போது பள்ளிவாசல் அருகில் உள்ள அந்த பழைய கட்டிடமே நடுநிலைப் பள்ளியாக இருந்தது.அதில்தான் 1971 இல்   வாக்கு சாவடியாக இருந்தது. அப்போது காங்கிரசுக்கு ஆதரவாக நாடார் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள் என்பதால் காமுகாஜா அவர்கள் அவர்களை வாக்களிக்க  வரக் கூடாது என்று உத்தரவிட்டதால் அவர்கள் யாரும் வாக்களிக்க முடியவில்லை .அது முதல் தெற்கு தெருவுக்கும் நாடார் தெருவுக்கும் சேர்ந்த வாக்கு சாவடி கொங்க ராயகுரிச்சிக்கு மாற்றப் பட்டது.இப்படி ஆராம்பன்னையில் திமுகவுக்கு எதிராக் ஓட்டே விழாத நிலை இருந்தது.அதன் பின்னர் எம்ஜியார் பிரிந்து தனி கட்சி ஆரம்பித்த பிறகு நமது ஊரிலும் கிளையை ஆரம்பித்து கொடி ஏற்றப்பட்டது.ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்கள் ,தற்போதைய பஞ்சாயத்து தலைவர் ஹனிபா,கஸ்ஸாலி காஜா ,செய்தாமது 'யூசுப்' ஆகியோர் .  ஜமாத்தினரால் இரண்டு நாளில் கொடிகம்பம் அகற்றப்பட்டு மூவரும் சிறைபிடிக்கப்பட்டனர்.வெள்ளி ஜும்மாவில் மூவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது.அதன் பின்னர் 1977  சட்டசபை தேர்தலில் இளைஞர்களில் குறைவான பிரிவினர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.அப்போது அதிமுகவுக்கு முப்பது ஓட்டுக்கள் விழுந்ததாக சொன்னார்கள் .அது படிப்படியாக அதாவது திமுக பிஜேபியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட 1999  பாராளுமன்ற தேர்தலில் முன்னூறு ஓட்டுக்களாக அதிமுகவுக்கு கிடைத்தது.பிஜேபியுடன் கூட்டணி வைத்த சமயத்திலும் திமுகவைட்டு மாறாத திமுக ஓட்டுக்கள் இப்போது அதிமுகவுக்கு சென்றது என்றால் அதற்கு காரணம் திமுகவின் மெகா மேதை ,தனது திமுக சகாக்களுடன் ஆலோசனை நடத்தாதன் காரணமா?அல்லது அவரது அகம்பாவமான பேச்சுக்களா ? இல்லை கள்ள மசூரா ஜமாத்துக்கு எதிராக மக்கள் வாக்களிதார்களா? அல்லது திணிக்கப்பட்ட வேட்பாளரை மக்கள் விரும்பவில்லையா?இந்த முன்னூறுக்கும் குறைவான ஓட்டுக்களில் திமுகவின் ஓட்டுக்கள் எத்தனை ?இதில் சுன்னத் ஜமாஅத் ஓட்டுக்கள் எத்தனை?,பாப்புலர் பிரன்ட்ஆப் இந்தியா ஓட்டுக்கள் எத்தனை?,கணவர் மனைவி குடும்ப ஓட்டுக்கள் எத்தனை? நாடார் மற்றும் S .C  க்களை 'கண்ணியமாக 'கவனித்ததால் கிடைத்த ஓட்டுக்களும் எத்தனை? அரசு அலுவலக காரியாமாற்றுவதில் வல்லுநர் என்று புகழப்பட்ட ஒசெங்காஜா சொல்லுவாரா? படித்த மெகா மேதை சொல்லுவாரா? மைதின்பிள்ளை   என்ற  தனி  நபருக்கு கிடைத்த ஓட்டுக்களுடன் ஒசங்காச்சா  வின் ஓட்டுக்களை ஒப்பீட்டுக் கொள்க திமுகவுக்கு கிடைத்த ஒப்ட்டுக்கள் எத்தனை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.