வியாழன், 6 ஜூன், 2013

அற்பனும் ஸ்கார்பியோ காரும்

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் " இப்படி ஒரு பழமொழி கேள்விபட்டிருப்பீர்கள் .
அற்பனுக்கு ஸ்கார்பியோ கார் கிடைத்தால் நடந்து  செல்பவர்களை காரை ஏற்றி கொன்றுவிடுவேன் என்று சொல்வானாம் .இது புது மொழி 

2001இல் கட்சி சீட் கிடைக்காததால் கவுன்சிலர் எலெக்சனில் அனாமதேயமாக நின்று போட்டியிட்டு தோற்று விட்டான் அந்த அற்பன் .எலெக்சனில் நிற்க காசில்லாமல் ,கடைவீதியில் பிச்சை எடுத்த அந்த அற்பனுக்கு நான் போட்ட பிச்சை ரூபாய் 2000/=