ஞாயிறு, 27 ஜனவரி, 2013


பலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக்காட்டிலும் படுமோசமாக உள்ளது
”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.
அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல  இரத்தப் புற்றுநோய் [leukemia]  பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது.  இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.
RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன்.  இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.
அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது.  இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது.  இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது.  அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.
பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள்.  மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….
“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன.  அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன.  அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…
“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன.  அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.
பாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது.  ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது.  “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை?  ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.
ஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று.  இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.
அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.  ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ்.  2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people.... You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.
கட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010
Collapse this post

புதன், 9 ஜனவரி, 2013

உங்க அப்பனுக்கு தாவுது பாய் எழுதிய கடிதத்தை வெளியிடவா?

கடுகு களவாணி நசீறு சொல்லியிருக்கான் ,தாவுது பாயை அவர்கள் நம்பித்தான் இருந்தார்களாம் நான்தான் அவர்மீது அதையும் இதையும் சொல்லி ,அவர்கள் வைத்த நம்பிக்கையை கெடுத்து விட்டேனாம் என்று புளுகுணி பண்டாரம் சொல்லியிருக்கிறான் ,.
அவன் சொன்னது உண்மை என்றால் ,இப்ப ஒன்னும் கெட்டுவிடவில்லை .அவரது மகனுக்கு விசா கொடுத்து ஜித்தாவில் வியாபாரத்தில் சேர்த்து பங்கு கொடுத்துவிட வேண்டியதுதானே .
இதுவரை வாங்கிய சொத்தில் மூன்றில் ஒரு பங்காவது அவருக்கு எழுதி வைத்து விடவேண்டியதுதானே,
அப்படி செய்து செங்கல் சுமந்தவனுக்கு வாழ்வு கொடுத்ததுக்கு நன்றி கடமையை நிறைவேற்றுங்கள் .
அயோக்கிய கழிசடை பயல்களே ,தாவுது பாயை சதி திட்டம்தீட்டி விரட்டியடித்து விட்டு இப்பபுருடா வேறா? உங்க அப்பனுக்கு தாவுது பாய் எழுதிய கடிதத்தை வெளியிடவா?
அந்த கடிதம் உண்மையை சொல்லுமே ,பார்த்துக் கொள்ளலாமா ?

இப்படித்தான் இன்னொருவரை சென்னை கடையை பார் .அப்புறம் உனக்கு உண்டியல் பட்டுவாடா தருகிறோம் என்று சென்னை அழைத்து சென்று பின்னர் உண்டியல் பட்டுவாடா கொடுக்க  மறுத்து ,நான் தான் கொடுக்க கூடாது என்று தடுத்ததாக ஒரு பொய்யை இன்னொரு பன்னாடை மூலம் பரப்பி வந்தான் ,இந்த செங்கல் சுமந்தவனுக்கு பாரிதாப பட்டு வாழ்வு கொடுத்தவருக்கு துரோகம்  இழைத்த ஹெச்.எஸ்